
வட்டுக்கோட்டை காவல்துறை பிரிவிற்குட்பட்ட பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன் மற்றொருவர் படுகாயமடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.குறித்த விபத்து இன்று (09.02.2026) முற்பகல் யாழ்ப்பாணம் – வட்டுக்கோட்டை காவல்துறை பிரிவிற்குட்பட்ட பொன்னாலையில் இடம்பெற்றுள்ளது சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், பொன்னாலை சந்தியில் இருந்து மாதகல் பக்கம் செல்கின்ற வீதியால் இருவர் மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்தனர்.இதன்போது அவர்கள் பயணித்த மோட்டார் சைக்கிள் வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதியோரம் நின்ற பனை மரத்துடன் மீது மோதி விபத்து சம்பவித்துள்ளது.இதன்போது ஒருவர் உயிரிழந்ததுடன், மற்றையவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்ப்பிக்கப்பட்டார்.உயிரிழந்தவரது சடலம் தற்போது காரைநகர் பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.இது குறித்து வட்டுக்கோட்டை காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.