இயலாமையோடு கூட்டத்தில் பங்கேற்றார் மகிந்த!!

இயலாமையோடு கூட்டத்தில் பங்கேற்றார் மகிந்த!!

 அனுராதபுரத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஏற்பாட்டில் பிரமாண்ட மக்கள் கூட்டமொன்று இடம்பெற்றுள்ளது. குறித்த கூட்டத்தில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவும் பங்கேற்றிருந்தார். 

உடல்நலக் குறைவு காரணமாக அவர் சிரமங்களை எதிர்கொண்டு வரும் நிலையில், உதவியாளர்களின் உதவியுடன் கூட்டத்தில் கலந்துகொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது, அவரது மகனும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்சவின் அரசியல் எதிர்காலத்தை முன்னிறுத்தியே மகிந்த ராஜபக்ச கூட்டத்தில் பங்கேற்றதாக அரசியல் வட்டாரங்களில் கருத்துகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

இதேவேளை, கடந்த காலங்களில் மகிந்த ராஜபக்சவுடன் நெருக்கமாக செயற்பட்ட கருணா, பிள்ளையான் மற்றும் டக்ளஸ் தேவானந்தா உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள் இந்தக் கூட்ட மேடையில் காணப்படவில்லை.

அதற்கு பதிலாக யாழ்ப்பாணத்தை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் அந்த மேடையை அலங்கரித்தார்

மேலும், ராஜபக்ச ஆட்சிக்காலம் தொடர்பான விமர்சனங்கள் மற்றும் கடந்தகால யுத்தம் தொடர்பான அரசியல் விவகாரங்கள், அந்தக் குடும்பத்தின் தற்போதைய அரசியல் செல்வாக்கில் தாக்கத்தை ஏற்படுத்தி வருவதாகவும் அரசியல் அவதானிப்பாளர்கள் தெரிவிக்கின்றனர்.

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *