குட்டிமணி, தங்கதுரை இருவருக்கும் சிலை செய்வது தொடர்பில் நீதிமன்ற உத்தரவு!!

குட்டிமணி, தங்கதுரை இருவருக்கும் சிலை செய்வது தொடர்பில் நீதிமன்ற உத்தரவு!!

 வல்வெட்டித்துறையில் குட்டிமணி, தங்கத்துரை ஆகியோருக்கு சிலை அமைப்பதற்கு பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தினால் விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டுள்ளது. 

வேலிக்கடை சிறையில் படுகொலை செய்யப்பட்ட குட்டிமணி மற்றும் தங்கத்துரை ஆகியோருக்கு சிலை அமைப்பதற்கு எதிராக வல்வெட்டித்துறை பொலிஸாரால் அதன் ஏற்பாட்டாளரும், முன்னாள் வல்வெட்டித்துறை நகர சபை உப தவிசாளருமான கந்தசாமி சதீஷுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது. 

இந்நிலையில், குறித்த வழக்கில் இன்று வரை வழங்கப்பட்டிருந்த சிலை அமைப்பதற்கான தற்காலிக தடை உத்தரவு நீக்கப்பட்டுள்ளது.

கடந்த 22.7.2026 அன்று வல்வெட்டித்துறை பொலிஸாரால் பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில் இவ்வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. 

வழக்கானது விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு நேற்றும் வாத பிரதிவாதங்கள் இடம்பெற்றிருந்த நிலையில் குறித்த வழக்கு தொடர்பில் மேலும் ஆதாரங்களை சமர்ப்பிக்க 14 நாட்கள் கால அவகாசம் கோரப்பட்டது.

எனினும், 106ஆம் இலக்க சட்ட பிரிவின் கீழ் 14 நாட்களுக்கு மேல் தடை உத்தரவு வழங்க முடியாது என்ற அடிப்படையில், பொலிஸார் எந்தவிதமான ஆதாரங்களையும் சமர்ப்பிக்காத நிலையில் நீதிமன்றத்தினால் வழங்கப்பட்டிருந்த தற்காலிக தடை உத்தரவு இல்லாதாக்கப்பட்டுள்ளது.

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *