
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் முன்னாள் பிரத்தியேக செயலாளர் சுகீஸ்வர பண்டாரவுக்கு விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு நீதிமன்றத்தில் இன்று (23.09.2026) முன்னிலைபடுத்தப்பட்டதைத் தொடர்ந்து, ஒக்டோபர் 07 ஆம் திகதி வரை அவர் மேலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
2022ஆம் ஆண்டில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் செயலாளராகப் பணியாற்றியபோதும், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பதவி வகித்த காலத்தில் ஜனாதிபதி செயலகத்தில் திட்டப் பணியாளராக பணியாற்றியபோதும், ஜனாதிபதியின் செலவினத் தலைப்பின் கீழ் இரண்டு சம்பளங்களைப் பெற்றதாக பண்டார மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
