ஜனாதிபதி உரிய முடிவுகளை எடுப்பார் – பிரதமர் தெரிவிப்பு!!

ஜனாதிபதி உரிய முடிவுகளை எடுப்பார் – பிரதமர் தெரிவிப்பு!!

 ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க சரியான நேரத்தில் உரிய தீர்மானங்களை எடுப்பார் என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

அரசியலமைப்பு, நீதிமன்றம் மற்றும் நாட்டின் பாரம்பரியங்களை மதித்தே எப்போதும் ஜனாதிபதி தனது தீர்மானங்களை மேற்கொள்வார் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கண்டியில் மல்வத்து மற்றும் அஸ்கிரி மகா நாயக்க தேரர்களைச் சந்தித்து ஆசி பெற்றதன் பின்னர், ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே பிரதமர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

ஞானசார தேரருக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்குவது தொடர்பான தீர்மானம் ஏதேனும் உள்ளதா என ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த பிரதமர் இதனைத் தெரிவித்துள்ளார்.

ஞானசார தேரருக்கு தண்டனை விதிக்கப்பட்ட விவகாரம் ஓர் ஒரு நீதிமன்ற செயற்பாடு எனவும் அதன் அடிப்படையில் நீதிமன்றத் தீர்ப்பு ஒன்று வழங்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

அது குறித்து நீதிமன்றத்திடமிருந்தே நாங்கள் அறிவுறுத்தல்களைப் பெற வேண்டும் எனுவும் ஜனாதிபதி சரியான நேரத்தில் சரியான தீர்மானங்களை எடுப்பவர் என தாம் கருதுவதகாவும் தெரிவித்துள்ளார்.

நாட்டின் நிலைமையைக் குறித்து சரியான புரிதலுடனும் புத்திசாலித்தனத்துடனும் அவர் ஒவ்வொரு முறையும் தீர்மானங்களை எடுக்கின்றார் என குறிப்பிட்டுள்ளார். நீதிமன்றத்தை அவர் மதிக்கின்றார். நாட்டின் பாரம்பரியங்களையும் அரசியலமைப்பையும் மதிக்கின்றார். அதற்கமையவே ஜனாதிபதி அவர்கள் முன்னோக்கிச் செல்வதற்கான தீர்மானங்களை எடுப்பார் எனப் பிரதமர் தெரிவித்துள்ளார். 

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *