டைபூன் சூறாவளி தொடர்பில் ஏற்படவுள்ள மாற்றம்!!

டைபூன் சூறாவளி தொடர்பில் ஏற்படவுள்ள மாற்றம்!!

 நாடு முழுவதும் நிலவும் சீரற்ற வானிலை நாளை நண்பகலின் பின்னர் குறையும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அரசு தகவல் திணைக்களத்தில் இன்று பிற்பகல் நடைபெற்ற சிறப்புச் செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு தகவல் வெளியிடும் போது, திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அஜித் விஜேமான்ன இதனை குறிப்பிட்டார்.

அதற்கமைய, நாளை நண்பகலின் பின்னர் நிலவும் மழை நிலைமை குறையும் என அவர் சுட்டிக்காட்டினார்.

மேலும் ஜப்பானுக்குத் தெற்கே பசிபிக் பெருங்கடலில் உருவாகியுள்ள டைபூன் சூறாவளி தீவிரமடைந்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அது தீவிரமடைவதுடன் எதிர்வரும் 06ஆம் திகதிக்குப் பின்னர் மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளில் மழை பெய்யக் கூடும் எனவும் மேலும் தெரிவித்தார்.

அதற்கமைய, சப்ரகமுவ மாகாணம் மற்றும் கண்டி, நுவரெலியா மாவட்டங்களில் அடைமழை பெய்யக் கூடும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *