திருமணத்திற்காக இலங்கை வந்த இளைஞனுக்கு விமானத்தில் ஏற்பட்ட துயரம்!!

திருமணத்திற்காக இலங்கை வந்த இளைஞனுக்கு விமானத்தில் ஏற்பட்ட துயரம்!!

 துருக்கியிலிருந்து விமானத்தில் இலங்கை வந்த இளைஞரொருவர் ஸ்பெயின் நாட்டை சேர்ந்த பெண்னிடம் தகாத முறையில் நடந்துக்கொண்டதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளார்.

இரத்தினபுரியை சேர்ந்த இளைஞர் விரைவில் நடைபெறவிருந்த தனது திருமணத்திற்காக விமானத்தில் நாடு திரும்பியுள்ளார்.

நீண்ட நேர விமான பயணத்தின் போது, ​​விமானத்தில் அடுத்த இருக்கையில் அமர்ந்திருந்த வெளிநாட்டுப்பெண், இலங்கையரான இளைஞனின் தோளில் சாய்ந்து உறங்கியுள்ளார்.

இதன் காரணமாக விமானத்தில் குழப்பம் ஏற்பட்ட நிலையில், குறித்த இளைஞரை கைது செய்து கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தை எதிர்கொண்ட பெண், ஒரு வார காலம் மாத்திரமே இலங்கையில் தங்கவுள்ளதாகவும், பொலிஸாரிடம் வாக்குமூலம் அளிக்க அவர் தயக்கம் காட்டியுள்ளார்.

இருப்பினும், சம்பவம் தொடர்பாக விமான நிறுவன அதிகாரிகளால் பதிவு செய்யப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நீதிமன்றத்தில் முன்னிலையான சந்தேகநபரின் வழக்கறிஞர், பொலிஸாரின் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளதுடன், தனது கட்சிக்காரர் எந்த விதமான பாலியல் துன்புறுத்தலிலும் ஈடுபடவில்லை என்றும் கூறியுள்ளார்.

நீண்ட விமானப் பயணத்தின் போது, ​​குறித்த பெண் சந்தேகநபரின் தோளில் சாய்ந்து உறங்கியதால், அவரை எழுப்புவதற்காக சந்தேகநபர் அவரது கையை பிடித்ததாகவும் விளக்கியுள்ளார்.

திடீரென எழுந்ததால் கலக்கமடைந்த வெளிநாட்டு பெண் ஏதேனும் பதற்றம் அல்லது அசௌகரியத்தின் காரணமாக அவ்வாறு நடந்துகொண்டிருக்கலாம் என்றும் வழக்கறிஞர் சுட்டிக்காட்டினார்.

இந்த அவசரநிலையை உணர்ந்த விமானப் பணிப்பெண்கள் உடனடியாகத் தலையிட்டு, அந்த பெண்ணை மற்றொரு இருக்கைக்கு அனுப்பியுள்ளனர்.

சந்தேகநபர், விரைவில் நடைபெறவிருந்த தனது திருமணத்திற்காக இந்த விமானத்தில் நாடு திரும்பியதாகவும், அவரது காதலியும் நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருந்ததாகவும் கூறப்படுகிறது.

உண்மைகளை கருத்தில் கொண்ட கொழும்பு பிரதான நீதவான் சந்தேகநபரை தலா ரூ. 100,000 மதிப்புள்ள இரண்டு பிணை பத்திரங்களில் செல்ல அனுமதிக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பான விசாரணைகளின் முன்னேற்றத்தை 9ஆம் திகதி நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு பொலிஸாருக்கு மேலும் உத்தரவிட்டுள்ளார்.

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *