
கிரிஷ் கொடுக்கல் வாங்கல் தொடர்பான வழக்கில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் பிணை மனு தொடர்பாக, இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவிடம் நீதிமன்றம் சாட்சியங்கள் தொடர்பான ஆதாரங்களைக் கோரியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, குறித்த ஆதாரங்களை நாளை (28.10.2026) சமர்ப்பிக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நாமல் ராஜபக்ச சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி, அவரைப் பிணையில் விடுவிக்கக் கோரி மனுவொன்றைத் தாக்கல் செய்திருந்தார்.
இதனிடையே, பிணை மனு தொடர்பான தமது சாட்சியங்களையும் ஆதாரங்களையும் சமர்ப்பிப்பதற்கு கால அவகாசம் வழங்குமாறு இலஞ்ச ஊழல் ஆணைக்குழு நீதிமன்றத்தைக் கோரியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
