
நாட்டின் மிக உயர்ந்த பதவியில் முன்னர் இருந்த பொலிஸ் அதிகாரியான முன்னாள் பொலிஸ் மா அதிபர் (ஐஜிபி) பூஜித் ஜயசுதந்தர, 2019 ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு முன்னதாக வந்த உளவுத்துறை எச்சரிக்கைகள் மீது நடவடிக்கை எடுக்கத் தவறிய குற்றத்திற்காக, கொழும்பு உயர் நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வின் பெரும்பான்மைத் தீர்ப்பின்படி இன்று(31) மரண தண்டனை விதிக்கப்பட்டார்.
மரண தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுதந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோர் நீதிமன்றத்திலிருந்து சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
ஈஸ்டர் ஞாயிறன்று நிகழவிருந்த பயங்கரவாதத் தாக்குதல் குறித்த உளவுத் தகவல் கிடைத்திருந்தும் அதனைத் தடுக்கத் தவறியது, கடமையில் இருந்து தவறியது மற்றும் கொலைக்கு உடந்தையாக இருந்தது ஆகிய குற்றங்களுக்காக, இருவருக்கும் கொழும்பு நிரந்தர மூவர் உயர் நீதிமன்றத்தின் பெரும்பான்மையான நீதிபதிகள் இன்று (31) மரண தண்டனை விதித்தனர்.
இந்நிலையில், இருவரும் சற்று முன்னர் சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
