யாழ். போதனா வைத்திய சாலைமில் ஏற்பட்ட தீ விபத்து!!

யாழ். போதனா வைத்திய சாலைமில் ஏற்பட்ட தீ விபத்து!!

யாழ். போதனா வைத்தியசாலை மருந்து களஞ்சியத்தில் தீ விபத்து – பல கோடி மருந்துகள் நாசம்!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இன்று (09/05) அதிகாலை பிரதான மருந்துக் களஞ்சியப் பகுதியில் திடீரெனப் பாரிய தீ விபத்து ஏற்பட்டு பெறுமதியான மருந்துகள் எரிந்து நாசமாகியுள்ளது.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் வடமேற்காக சவச்சாலைக்கு அருகிலேயே மருந்து களஞ்சியம் அமைந்திருந்தது

தகவல் அறிந்தது விரைந்து வந்த யாழ். மாநகர சபை தீயணைப்புப் பிரிவினர் , வைத்தியசாலை ஊழியர்கள், பொலிசார், மற்றும் முப்படையினர் இணைந்து தீயைக் கட்டுப்படுத்த உயிரைப் பணயம் வைத்துப் போராடினர். நீண்ட போராட்டத்திற்குப் பின்னரே தீ ஓரளவுக்குக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

இந்த விபத்தில் புற்றுநோய் மருந்துகள் மற்றும் சத்திரசிகிச்சைக்குத் தேவையான பல கோடி ரூபாய் பெறுமதியான அத்தியாவசிய மருந்துகள் தீயில் கருகிச் சாம்பலாகியுள்ளன. இது ஒட்டுமொத்த வடமாகாண சுகாதார சேவையையும் உலுக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது

மின் கசிவு காரணமாக விபத்து ஏற்பட்டிருக்கலாம் என முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலதிக விசாரணைகளை யாழ் பொலிஸார் தீவிரப்படுத்தியுள்ளனர்.

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *