வடமராட்சி கிழக்கு தேசிய ரீதியில் இடம்பிடித்தது – சாதனை படைத்த வீராங்கனைகள்!!

வடமராட்சி கிழக்கு தேசிய ரீதியில் இடம்பிடித்தது – சாதனை படைத்த வீராங்கனைகள்!!

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் நடாத்தப்படும் 36வது தேசிய விளையாட்டு நிகழ்வின் ஒரு அங்கமான கடற்கரை கரப்பந்து (Beach Volleyball) போட்டியானது அண்மையில் நீர்கொழும்பு பிரவுன் கடற்கரையில் (Browns Beach) மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது.

இப்போட்டியில் யாழ்ப்பாண மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி, வடமராட்சி கிழக்கு பிரதேச இளைஞர் கழக சம்மேளனத்திற்குட்பட்ட அம்பன் மருதம் இளைஞர் கழகத்தைச் சேர்ந்த வீராங்கனைகள் கலந்துகொண்டிருந்தனர்.

மாவட்ட மட்டத்தில் தங்களது அசாத்திய திறமைகளை வெளிப்படுத்தி, தேசிய ரீதியிலான போட்டிக்கு தகுதி பெற்றிருந்த இவ்வீராங்கனைகள், தேசிய மட்டப் போட்டிகளிலும் மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வடமராட்சி கிழக்கு பிரதேசத்திற்கு பெரும் பெருமையைத் தேடித்தந்துள்ளனர்.

நடப்பு ஆண்டிலும் தேசிய ரீதியில் தங்களது முத்திரையைப் பதித்து, பிரதேசத்தின் விளையாட்டுத் துறைக்கு பெருமை சேர்த்த அம்பன் மருதம் இளைஞர் கழக வீராங்கனைகளுக்கும், அவர்களை வழிநடத்திய வடமராட்சி கிழக்கு பிரதேச இளைஞர் கழக சம்மேளனத்திற்கும் சமூக ஆர்வலர்களும் விளையாட்டு ரசிகர்களும் தங்களது வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்து வருகின்றனர்.

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *