தேனிலவுப் பயணத்தில் பெற்றோர் சகோதரரை இணைத்தமையால் கணவன் – மனைவி விவாகரத்து!!

தேனிலவுப் பயணத்தில் பெற்றோர் சகோதரரை இணைத்தமையால் கணவன் – மனைவி விவாகரத்து!!

 தேனிலவுக்கு பெற்றோரை அழைத்து சென்ற மாப்பிள்ளையால் , குடும்பமே பிரியும் விலைக்கு தள்லப்பட்டுள்ள சம்பவம் இந்தியாவில் அரங்கேறியுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலம், மீரட்டைச் சேர்ந்த திவ்யாவுக்கும், டெல்லியில் வசிக்கும் சிவம் குமாருக்கும் ஆன்லைன் மெட்ரிமோனி ஊடாக பார்க்கப்பட்டு அண்மையில் பெற்றோர்களால் திருமணம் செய்து வைக்கப்பட்டது.

விருந்தோம்பல் மேலாண்மை படித்த சிவம், திருமணத்திற்குப் பிறகு தன் மனைவியுடன் துபாய்க்குத் தேனிலவு செல்லத் திட்டமிட்டிருந்தார். ஆனால், அவர் தன் மனைவியுடன், தன் பெற்றோர், சகோதரி மற்றும் சகோதரரையும் அதே பயணத்திற்கு அழைத்துச் சென்றிருந்தார்.

தன் கணவருடன் தனிமையில் நேரம் செலவிட நினைந்த திவ்யாவுக்கு இது பிடிக்கவில்லை. தேனிலவு என்பது தம்பதியினரின் தனிப்பட்ட விஷயம் என்றும், குடும்ப உறுப்பினர்களுடன் செல்வது பயணத்தின் நோக்கத்தையே கெடுத்துவிடும் என்றும் அவர் கூறினார்.

ஆனால் தன் குடும்பத்தினரை மகிழ்விப்பதற்காகவே அவர்களை அழைத்துச் வந்ததாகவும், அதில் எந்தத் தவறும் இல்லை என்றும் கணவர் வாதிட்டார். இதனால் இருவருக்கும் இடையில் பிணக்கு ஏற்பட்டு விவாகரத்து முடிவு வரை சென்றது.

இருவருக்கும் மீரட் பொலிஸ் லைன்ஸ் குடும்ப ஆலோசனை மையத்தில் மூன்று சுற்று ஆலோசனை அமர்வுகள் நடைபெற்றபோதும்  இருவரும் சமாதானம் ஆவதாக இல்லை. நான்காம் சுற்று விரைவில் நடைபெற உள்ளது.

இந்த சம்பவம் இணையத்தில் விவாதப்பொருளாக மாறி, இளைஞர்கள் மத்தியில் தனியுரிமை மற்றும் குடும்ப நலன் குறித்த விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *