
விஜய் இன் த. வெ. க வெற்றி கழக கொண்டாட்டத்திற்காக விரைந்து சென்ற இரு இளைஞர்கள் உயிரிழந்த சம்பவம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது.
மோட்டார் சைக்கிளில் சென்றவேளை வாகனம் கட்டுப்பாட்டை இழந்து வீட்டு மதிலில் மோதியதால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
யாழ்ப்பாணத்திலிருந்து பருத்தித்துறை நோக்கிப் பயணித்தவேளை குறித்த விபத்து இடம் பெற்றுள்ளது. இதன்போது கரவெட்டி வடக்கைச் சேர்ந்த சிவதாசன் துசிந்தன் (22), ஏழுமலை துசாந்தன் (24) ஆகிய இரண்டு இளைஞர்கள் சம்பவ இடத்தில் உயிரிழந்தனர்.
சடலம் பிரேத பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது எனவும்
விபத்து தொடர்பான விசாரனைகளை கோப்பாய் பொலிசார் முன்னெடுத்து வருவதாகவும் கூறப்படுகிறது.
