
புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியா வழக்கில், தண்டனை விதிக்கப்பட்டிருந்த கைதி ஒருவர் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வழக்கொன்றுக்காக யாழ்ப்பாணம் அழைத்துச் சென்றிருந்த நிலையில், அங்குள்ள சிறைச்சாலையில் வைத்து அவர் உயிரை மாய்த்துக் கொண்டதாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் ஏ.சி.கஜநாயக்க உறுதிப்படுத்தினார்.
யாழ்ப்பாணம், புங்குடுதீவு பகுதியை சேர்ந்த 18 வயதுடைய மாணவி சிவலோகநாதன் வித்தியா என்ற பாடசாலை மாணவியை கூட்டு வன்புணர்வு செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 46 வயதான பூபாலசிங்கம் ஜெயகுமார் என்ற கைதியே உயிரிழந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இந்த சம்பவம் தொடர்பில், விரிவான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக, சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
அதேவேளை யாழ்ப்பாணம், புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்யா என்ற பாடசாலை மாணவியை கூட்டு வன்புணர்வு செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதி புபாலசிங்கம் தவகுமார் செந்தில் (37) கடந்த இரு வருடங்க்களின் முன்னார் கண்டி தேசிய வைத்தியசாலையில் உயிரிழந்துள்ள நிலையில் மற்றுமொருவர் தற்போது உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய, புங்குடுதீவு பாடசாலை மாணவியான சிவலோகநாதன் வித்யாவை கடந்த 2015ஆம் ஆண்டு கடத்திச் சென்று, கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தி கொலை செய்தமை தொடர்பான வழக்கில், ‘சுவிஸ் குமார்’ உள்ளிட்ட நான்கு குற்றவாளிகளுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை உயர்நீதிமன்றம் 2026 மே மாதம் 6 திகதி உறுதிப்படுத்தி இருந்தது.
கடந்த 2015 ஆண்டில் , 18 வயதுடைய சிவலோகநாதன் வித்யா கூட்டு வன்புனர்வுக்கு உடபடுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டிருந்தமை முழு நாட்டையுமே உலுக்கி இருந்தமை குறிப்பிடத்தக்கது