
தொடர்கிறது சாகசங்களால் பறிபோகும் உயிர்கள்….🥺 பறிபோன தாயின் உயிர்
கிளிநொச்சி, உருத்திரபுரம் – கரடிபோக்கு வீதியில் இன்று (25) மதியம் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் சண்முகம்கஜிதா (32 வயது)என்னும் இளம்தாய்ஒருவர் உயிரிழந்துள்ளார்.
பாடசாலை முடிந்து மகளை அழைத்துக்கொண்டுவர தாயொருவர் மோட்டார் சைக்கிளில் சென்றபோது, அதிவேகமாக வந்த மற்றுமொரு மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
தாயார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். விபத்தை ஏற்படுத்திய இளைஞர்களில் ஒருவரும் காயமடைந்துள்ளார்.
சம்பந்தப்பட்ட இளைஞர்கள் பெரியளவிலான மோட்டார் சைக்கிளில் அதிவேகமாகச் சென்றமையும், மது அருந்தியிருந்தமையும் தான் விபத்திற்குக் காரணம் என அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.