விலை அதிகரிப்பில் அலைபேசிகள்!!

விலை அதிகரிப்பில் அலைபேசிகள்!!

 அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி பாரியளவில் வீழ்ச்சியடைந்துள்ளதன் காரணமாக, உள்நாட்டு சந்தையில் கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் அவற்றின் உதிரிப்பாகங்களின் விலைகளை அதிகரிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக இலங்கை கையடக்க தொலைபேசி இறக்குமதியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.


இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில், அமெரிக்க டொலரின் பெறுமதி தொடர்ச்சியாக அதிகரித்து வருவதால், வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் கையடக்கத் தொலைபேசிகள், சார்ஜர்கள், இயர்போன்கள், பேட்டரிகள் மற்றும் பிற உதிரிப்பாகங்களின் இறக்குமதி செலவுகள் கணிசமாக உயர்ந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது

இதன் விளைவாக, விற்பனையாளர்கள் அதிக செலவில் பொருட்களை இறக்குமதி செய்ய வேண்டிய நிலை உருவாகியுள்ளதால், அந்தச் செலவு நேரடியாக நுகர்வோரின் மீது சுமத்தப்பட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக சங்கம் தெரிவித்துள்ளது.

மேலும், தற்போதைய நாணய மாற்று விகித நிலைமை நீடித்தால், எதிர்வரும் நாட்களில் கையடக்கத் தொலைபேசிகளின் விலைகளில் மேலும் அதிகரிப்பு ஏற்படக்கூடும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், டொலர் பற்றாக்குறை மற்றும் இறக்குமதி செலவின உயர்வு காரணமாக சில மாடல் கையடக்கத் தொலைபேசிகள் சந்தையில் தட்டுப்பாட்டை எதிர்கொள்ளும் அபாயமும் காணப்படுவதாக விற்பனையாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *