வெப்ப அலை காரணமாக பிரித்தானியாவில் மூடப்பட்ட பூங்கா!!

வெப்ப அலை காரணமாக பிரித்தானியாவில் மூடப்பட்ட பூங்கா!!

பிரித்தானியாவில் ஐந்தாவது வெப்ப அலை தீவிரமடைந்து வரும் நிலையில், தென்மேற்கு லண்டனில் அமைந்துள்ள பிரபல ‘செசிங்டன் வேர்ல்ட் ஒஃப் எட்வென்ச்சர்ஸ்’ பொழுதுபோக்கு பூங்கா திடீர் நீர் தட்டுப்பாடு காரணமாகத் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

உள்ளூர் பகுதியில் ஏற்பட்ட நீர் விநியோகத் தடை காரணமாகவே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக பூங்காவின் நிர்வாகம் அறிவித்துள்ளது.

அத்துடன், இன்றைய தினத்திற்காக முன்பதிவு செய்துள்ள பார்வையாளர்கள் பூங்காவிற்கு வருகை தர வேண்டாம் என்றும், அவர்களின் நுழைவுச்சீட்டுகள் ‘ரிட்டர்ன் புரொமிஸ்’ (Return Promise) திட்டத்தின் கீழ் மறுபரிசீலனை செய்யப்பட்டு எதிர்காலத்தில் பயன்படுத்த அனுமதி வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆண்டுதோறும் சுமார் 1.5 மில்லியன் பார்வையாளர்கள் வருகை தரும் ஐரோப்பாவின் முன்னணி பொழுதுபோக்கு பூங்காக்களில் ஒன்றான செசிங்டன், இதற்கு முன்னர் 2018 ஆம் ஆண்டிலும் இதேபோன்று பிரதான நீர்ழாய் உடைந்தமையினால் மூடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *