
“Rebuild Industries” உத்தியோகபூர்வ கைத்தொழில் இதழ் கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சிகள் அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி தலைமையில் லேக் ஹவுஸ் நிறுவனத்தில் இன்று வெளியீட்டு வைக்கப்பட்டது.2030ஆம் ஆண்டளவில் 36 பில்லியன் டொலர் ஏற்றுமதி இலக்கை அடைவதற்கான கைத்தொழில் அமைச்சின் விசேட திட்டத்தின் ஒரு அங்கமாக இவ்விதழ் அறிமுகமானது.தொழில்முயற்சித் திறனை மேல் மாகாணத்திலிருந்து ஏனைய மாகாணங்களுக்கும் விரிவுபடுத்துவதே இதன் முக்கிய நோக்கம் என அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி தெரிவித்தார்.இந்நிகழ்வில் பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க மற்றும் லேக் ஹவுஸ் நிறுவனத்தின் உயர் அதிகாரிகள் உள்ளிட்ட பல முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்
