
பிரபல ஈழ விடுதலைப் போராட்டப் பாடகர் தேனிசை செல்லப்பா இன்று (ஏப்.28) காலமானார்.
தமிழீழ விடுதலைப் போராட்டம் மற்றும் தமிழ்த் தேசிய உணர்வை ஊட்டும் வகையில் நூற்றுக்கணக்கான பாடல்களைப் பாடி, “பாசறைப் பாணர்” என்று மக்களால் அன்புடன் அழைக்கப்பட்டவர் இவர்.
தென்காசி மாவட்டத்தில், உள்ள சிங்கிலிபட்டி என்ற சிற்றூரில் பிறந்த இவர் தனது 85வது வயதில் காலமானார்.
