இலங்கையை வந்தடைந்தது இந்திய அணி!!

இலங்கையை வந்தடைந்தது இந்திய அணி!!

2025-2027 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இரண்டு போட்டிகளில் பங்கேற்பதற்காக இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணி நேற்று (04) மாலை இலங்கை வந்தடைந்துள்ளது. 

இதன் முதலாவது போட்டி வரும் ஓகஸ்ட் 15 முதல் 19 ஆம் திகதி வரை காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

இரண்டாவது போட்டி வரும் ஓகஸ்ட் 23 முதல் 27 ஆம் திகதி வரை கொழும்பு எஸ்.எஸ்.சி (S.S.C.) மைதானத்தில் நடைபெறவுள்ளது.

உலக டெஸ்ட் தரவரிசையில் இந்தியா 5ஆவது இடத்திலும், இலங்கை 6ஆவது இடத்திலும் உள்ளதால், இரு அணிகளுக்கும் இந்த இரண்டு டெஸ்ட் போட்டிகளும் மிகவும் முக்கியமானவை ஆகும்.

இந்த டெஸ்ட் போட்டிகளுக்கு ஆயத்தமாகும் வகையில், ஆகஸ்ட் 07 முதல் 10 ஆம் திகதி வரை கொழும்பு என்.சி.சி (N.C.C.) மைதானத்தில் பயிற்சிப் போட்டியொன்றை நடத்த இலங்கை கிரிக்கெட் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *