இலங்கையில் இடம்பெற்ற வீதிவிபத்துகள் குறித்த அறிவிப்பு!!

இலங்கையில் இடம்பெற்ற வீதிவிபத்துகள் குறித்த அறிவிப்பு!!

 2026ஆம் ஆண்டில் இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீதி விபத்துக்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அதன்படி சுமார் 1605 சாலை விபத்துகள் பதிவாகியுள்ளதாக பொலிஸ் போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் சாலை பாதுகாப்பு இயக்குநரகத்தின் பொறுப்பு டி.ஐ.ஜி. டபிள்யூ.பி.ஜே. சேனதீரா தெரிவித்துள்ளார்.

இன்று (13.08.2026) நடைபெற்ற ஊடக சந்திப்பில் வைத்து அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், இந்த விபத்துக்களில் 1693 பேர் உயிரிழந்துள்ளனர்.

இவ்வாறு உயிரிழந்தவர்களில் 555 பாதசாரிகள், 603 மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள், 119 பின்னால் அமர்ந்து பயணித்தவர்கள், 115 சைக்கிள் ஓட்டுநர்கள், 136 ஓட்டுநர்கள் மற்றும் 162 பயணிகள் அடங்குகின்றனர்.

மேலும், இதுவரை 3125 கடுமையான விபத்துகள், 6477 சிறிய விபத்துகள் மற்றும் 2388 இழப்பு விபத்துகள் பதிவாகியுள்ளன.

இருப்பினும், கடந்த ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடும்போது வீதி விபத்துகளில் சற்று குறைந்து காணப்படுகிறது எனவும் குறிப்பிட்டுள்ளார். 

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *