வரி செலுத்து வோருக்கான முக்கிய அறிவிப்பு!!

வரி செலுத்து வோருக்கான முக்கிய அறிவிப்பு!!

 2026 ஆம் ஆண்டு ஜூலை மாதத்திற்கான பெறுமதி சேர் வரியை (VAT) ஓகஸ்ட் 20 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் செலுத்துமாறு உள்நாட்டு இறைவரித் திணைக்களம் (IRD) அறிவித்துள்ளது.  

இதற்கமைய, வரியை செலுத்த தவறினால் அல்லது தாமதமாகச் செலுத்தினால் அபராதம் விதிக்கப்படும் என்றும் திணைக்களம் எச்சரித்துள்ளது.

காசோலைகள், வங்கி வரைவோலைகள் அல்லது கட்டளைப் பத்திரங்கள் மூலம் செய்யப்படும் கட்டணங்கள் உரிய திகதிக்குப் பின்னர் பெறப்பட்டால், அவை தாமதமானதாகவே கருதப்படும் என்றும் மேலும் குறிப்பிட்டுள்ளது.

மேலும், ஜூலை மாதத்திற்கான VAT அறிக்கைகள் ஆகஸ்ட் 31ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் இணையவழியில் சமர்ப்பிக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதற்கிடையில், முற்பண வரியை (Withholding Tax) ஓகஸ்ட் 15, 2026 அல்லது அதற்கு முன்னர் செலுத்துமாறும் வரி செலுத்துவோரை உள்நாட்டு இறைவரித் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.

ஜூலை மாதத்திற்கான சமூகப் பாதுகாப்பு பங்களிப்பு வரியை ஆகஸ்ட் 20 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் செலுத்த வேண்டும் என்றும் அத்துறை அறிவுறுத்தியுள்ளது. 

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *