அதிகார துஷ்பிரயோகத்திற்கு எதிரான போராட்டம்

அதிகார துஷ்பிரயோகத்திற்கு எதிரான போராட்டம்

அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவையை களங்கப்படுத்தும், அதிகாரத்தை  தவறாக பயன்படுத்தும் அரச அதிகாரிகளுக்கு எதிரான சுகவீன விடுமுறை போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.


யாழ் ஊடக அமையத்தில் இன்று (15.08.2026) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த ஒன்றுகூடலுக்காக எதிர்வரும் திங்கட்கிழமை 17ஆம் திகதி காலை 8 மணிக்கு கைதடியில் உள்ள வடக்கு மாகாண சபை அலுவலகம் முன்பாக ஒன்றுகூடுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடக்கு மாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கத்தின் அழைப்பில் வடக்கு மாகாண தொழிற்சங்கங்களின் சம்மேளனம், இலங்கை ஆசிரியர் சங்கம் ஆகியவற்றின் ஆதரவுடன் குறித்த போராட்டம் நடைபெறவுள்ளது.  

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *