நுவரெலியா வாவியில் படகு விபத்து!!

நுவரெலியா வாவியில் படகு விபத்து!!

 நுவரெலியா – கிரகரி வாவியில் ஜெட் ஸ்கீ (Jet ski) படகில் பயணித்த போது, விபத்தில் சிக்கிய படகில் நீரில் மூழ்கும் அபாயத்திலிருந்த இரண்டு சிறுவர்கள் கடற்படையினரால் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.

நேற்று (16) இந்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது. வாவியில் சுற்றாடல் பாதுகாப்பு மற்றும் உயிர்காப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த கடற்படையின் உடனடி விரைவு மீட்புக் பிரிவினர், படகு கவிழ்ந்ததைக் கண்டு உடனடியாகச் செயற்பட்டு சிறுவர்களை மீட்டுள்ளனர்.

மினுவாங்கொட பகுதியைச் சேர்ந்த 11 மற்றும் 13 வயதுடைய சிறுவர்களே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளனர். மீட்கப்பட்ட சிறுவர்கள் இருவரும் நுவரெலியா காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *