கனடாவில் குடியுரிமை கோருவோரின் எண்ணிக்கை அதிகரிப்பு!!

கனடாவில் குடியுரிமை கோருவோரின் எண்ணிக்கை அதிகரிப்பு!!

 கனேடிய குடியுரிமைச் சான்றிதழ் கோருவோர் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

வெளிநாடுகளில் பிறந்த கனேடியர்களுடைய  பிள்ளைகள் வெளிநாட்டில் பிறக்கும் பட்சத்தில், அவர்களுடைய கனேடிய குடியுரிமை அவர்களுடைய பிள்ளைகளைச் சென்றடையாது என்னும் நிலை கனடாவில் இருந்தது. 

ஆனால், ’குடியுரிமைச் சட்டத்தைத் திருத்துவதற்கான ஒரு சட்டம்’ என்னும் மசோதா, சட்டமாக மாறியுள்ளதால், பாதிக்கப்பட்டிருந்த ஆயிரக்கணக்கான மக்கள் தற்போது கனேடிய குடியுரிமை பெறத் தகுதி பெற்றுள்ளார்கள்.

இந்நிலையில், கனேடிய குடியுரிமைச் சான்றிதழ் கோருவோர் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருகிறது.

அதற்கு முக்கியக் காரணம், ஆயிரக்கணக்கான அமெரிக்கர்கள் கனேடிய குடியுரிமைச் சான்றிதழ் கோரி விண்ணப்பித்து  வருகிறார்கள்.

இதற்கிடையில், தாங்கள் கனேடிய குடியுரிமைச் சான்றிதழ் பெறும் நோக்கில், தங்கள் மூதாதையர்கள் கனேடியர்கள் என்பதை உறுதி செய்வதற்காக அது தொடர்பான அலுவலகங்களுக்கு வரும் விண்ணப்பங்களின் எண்ணிக்கையும் 300 சதவிகிதம் அதிகரித்துள்ளதாக சம்பந்தப்பட்ட அலுவலக அலுவலர்கள் தெரிவிக்கிறார்கள்.

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *