புதிதாக உயர் நீதிமன்ற நீதியரசர்கள் நியமிப்பு!!

புதிதாக உயர் நீதிமன்ற நீதியரசர்கள் நியமிப்பு!!

 ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவினால் மூன்று புதிய உயர் நீதிமன்ற நீதியரசர்களுக்கான நியமனங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன. 

இதன்படி, நீதிச் சேவையின் சிறப்புப் பிரிவைச் சேர்ந்த பின்வரும் அதிகாரிகள் உயர் நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர். 

பெருமாள் சிவகுமார் (தற்போது யாழ்ப்பாண மாவட்ட நீதியரசராக பணியாற்றுகிறார்).

ஆனந்தி கனகரத்தினம் (தற்போது நீதிச் சேவைகள் ஆணைக்குழுவின் சிரேஷ்ட உதவிச் செயலாளராகப் பணியாற்றுகிறார்)

மற்றும் ஞானேஷ லலித் கன்னங்கர (தற்போது கொழும்பு மாவட்ட நீதியரசராக பணியாற்றுகிறார்).

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க, இன்று (23) காலை ஜனாதிபதி செயலகத்தில் இவர்களுக்கான நியமனக் கடிதங்களை வழங்கினார்.

இந்நிகழ்வில் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமணாயக்க ஆகியோரும் கலந்துகொண்டனர்.

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *