தோல்வியில் முடிந்த சுரேஷ் சாலேயின் திட்டங்கள்!!

தோல்வியில் முடிந்த சுரேஷ் சாலேயின் திட்டங்கள்!!

 அரச புலனாய்வு பிரிவின் முன்னாள் பிரதானி சுரேஷ் சலேவுக்காக அவரது நண்பர்கள் இதுவரை பின்பற்றிய பல்வேறு தந்திரங்கள் தோல்வியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகளுக்காக நீதிமன்ற உத்தரவின் பேரில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அவர் நண்பர்களின் ஆலோசனையின் பெயரில் செயற்படுவதாக தெரியவந்துள்ளது.

சுரேஷ் சலே கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தீவிர சத்திர சிகிச்சை பிரிவில் சிறப்புச் சலுகைகளுடன் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.

எனினும் இந்தத் தோல்வியைத் தொடர்ந்து, திடீரென கடந்த 21 ஆம் திகதி சாதாரண அறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பணிப்பாளர் நீதிமன்றில் நேரடியாக முன்னிலையாக வேண்டும் என வழங்கப்பட்டிருந்தது.

இந்த உத்தரவை தொடர்ந்து, சலே மற்றும் அவருக்காக செயற்பட்ட குழுவினர் அச்சமடைந்துள்ளனர்.

நேற்று முன்தினம் நீதிமன்றத்தில் முன்னிலையான தேசிய வைத்தியசாலையின் பணிப்பாளர், சுரேஷ் சலே சாதாரண அறைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

அத்துடன், அவருக்கு சுமார் 40 இலட்சம் ரூபா பெறுமதியான இதயக் கருவி ஒன்று பொருத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *