
றகர் வீரர் வசீம் தாஜுதீன் படுகொலை தொடர்பான விசாரணைகளின் போது கண்டறியப்பட்ட, படுகொலைக்கு பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 3 வாகனங்கள் தொடர்பில் பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ளன.
குறித்த வாகனங்கள் மேலும் பல குற்றச் செயல்களுக்காக பயன்படுத்தப்பட்டுள்ளமைக்கான தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஜனாதிபதி செயலகம் ஊடாக ஷிரந்தி ராஜபக்ச மற்றும் யோசித ராஜபக்ச ஆகியோரின் பாதுகாப்பிற்காக இந்த 3 கெப் வாகனங்களும் வழங்கப்பட்டுள்ளன.
WP PD 79–, WP PD 80–, WP GB 05– இலக்கங்களைக் கொண்ட இந்த 3 கெப் வாகனங்களும் வசீம் தாஜுதீன் படுகொலை சம்பவத்துடன் நேரடியாக தொடர்புள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது
சர்ச்சைக்குரிய 3 வாகனங்களுக்கும் உரிய இயக்கப் பதிவேடுகள் இல்லாமை, மற்றும் இயக்கப் பதிவேடுகள் முறையற்றவையாக இருத்தல் உள்ளிட்ட பல பிரச்சினைகளும் காணப்பட்டன.
இந்த வாகனங்கள் தொடர்பான விசாரணைகளின் போது, அவைகள் வேறு குற்றச் செயல்களுக்கும் பயன்படுத்தப்பட்டுள்ளது.
பல தரப்பினரால் அவை பயன்பாட்டில் இருந்தமையும் தெரியவந்துள்ளது
