சிறப்புற நடைபெற்ற கிழக்கு பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா!!

சிறப்புற நடைபெற்ற கிழக்கு பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா!!

 கிழக்கு பல்கலைக்கழகத்தின் 30வது பொதுப்பட்டமளிப்பு விழா இன்றைய தினம்(3) வெகுவிமரிசையாக நடைபெற்றது.

2026ஆம் ஆண்டுக்கான இந்த பட்டமளிப்பு விழாவானது மட்டக்களப்பு பிள்ளையாரடியில் உள்ள விஞ்ஞான சௌக்கிய பராமரிப்பு பீடத்தில் உள்ள அரங்கில்  நடைபெற்றது.

கிழக்கு பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் பிரதீபன் அவர்களின் ஒழுங்கமைப்பில்  ஓய்வுநிலை பேராசிரியர் சி.மௌனகுரு அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்த பட்டமளிப்பு விழாவில் பல்கலைக்கழக  மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் சிரேஸ்ட பேராசிரியர் கபில செனவிரட்ன பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

இந்த நிகழ்வில் கிழக்கு பல்கலைக்கழகத்தின் திருகோணமலை வளாக பணிப்பாளர் பேராசிரியர் டாக்டர் சுந்தரேசன்,விபுலானந்தா அழகியல் கற்கைகள் நிறுவகத்தின் பணிப்பாளர் கலாநிதி பாரதி கெனடி உட்பட பீடங்களின் தலைவர்கள்,பேராசிரியர்கள்,விரிவுரையாளர்கள்,பல்கலைக்கழக பேரவை உறுப்பினர்கள் என பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது அதிதிகளும் பல்கலைக்கழக மாணவர்களும் தமிழர்களின் கலாசார பண்பாட்டு விழுமியங்கள் கொண்ட இனிய இசைஅணியினரால் அழைத்துச்செல்லப்பட்ட நிலையில் நிகழ்வுகள் ஆரம்பமானது.

கிழக்கு பல்கலைக்கழகத்தி சுமார் 57துறைகளில் பட்டப்படிப்பு,பட்ட மேற்படிப்புகளை நிறைவுசெய்த 2369பேருக்கு பட்டங்கள் வழங்கிகௌரவிக்கப்பட்டதுடன் மருத்துவ துறை மற்றும் ஏனைய துறைகளின் தங்க விருதுகள் பெற்ற சிறப்பு தகைமைபெற்றவர்களும் கௌரவிக்கப்பட்டனர்.

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *