பொதுமக்களின் உதவியை நாடும் பொலிசார்!!

பொதுமக்களின் உதவியை நாடும் பொலிசார்!!

 மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்புப் பிரிவினால் முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணை ஒன்றுடன் தொடர்புடைய மூன்று சந்தேகநபர்களைக் கைது செய்வதற்காகப் பொலிஸார் பொதுமக்களின் உதவியைக் கோரியுள்ளனர்.

குறித்த சந்தேகநபர்கள் மூவரும் தங்களது வசிப்பிடங்களை விட்டுத் தப்பிச் சென்று தற்போது தலைமறைவாக உள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஹிமாலி செவ்வந்தி ராஜபக்ச பத்திரண, தரிந்து ஜீவந்த ராஜபக்ச பத்திரண மற்றும் விராஜ் நிமாஷ்க பத்தேகம பத்திரண ஆகியோரே இவ்வாறு தேடப்பட்டு வரும் சந்தேகநபர்களாவர்.

இவர்கள் தொடர்பில் ஏதேனும் தகவல் தெரிந்தால் அருகிலுள்ள பொலிஸ் நிலையத்திற்கோ அல்லது மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்புப் பிரிவின் பணிப்பாளரின் 071 859 2167 என்ற தொலைபேசி இலக்கத்திற்கோ தொடர்புகொண்டு அறிவிக்குமாறு கோரப்பட்டுள்ளது. 

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *