ரோசி சேனாநாயக்க வீட்டிற்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்திய மகிந்த!!

ரோசி சேனாநாயக்க வீட்டிற்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்திய மகிந்த!!

 முன்னாள் இராஜாங்க அமைச்சரும், கொழும்பு மாநகரசபையின் முன்னாள் மேயருமான ரோசி சேனாநாயக்கவின் மூத்த புதல்வரான கனிஷ்க சேனாநாயக்கவுக்கு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அஞ்சலி செலுத்தியுள்ளார்.

கனிஷ்க சேனாநாயக்கவின் மறைவுச் செய்தி மிகுந்த துயரத்தை அளிப்பதாக மகிந்த ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார். 

ரோசி சேனாநாயக்கவின் வீட்டிக்கு நேற்று நேரில் சென்று தனது அனுதாபத்தை தெரிவித்தார்.

இளம் வயதில் காலமான அவரது மறைவு குறித்து எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறேன் என அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவொன்றை பதிவிட்டு குறிப்பிட்டுள்ளார்.

எத்தகைய வயதில் மரணம் நிகழ்ந்தாலும், ஒரு பிள்ளையை இழந்து தவிக்கும் பெற்றோருக்கு அந்தத் துயரத்தை தாங்கிக் கொள்ள முடியாது.

குறிப்பாக, இளம் வயதில் ஏற்படும் பிள்ளையின் இழப்பு என்பது ஒருபோதும் ஆற்ற முடியாத மாபெரும் வேதனையாகும்.

இந்தத் துயரமான தருணத்தில் ரோசி சேனாநாயக்க மற்றும் அவரது குடும்பத்தினர் அனைவருக்கும் தேவையான மன வலிமையையும் தைரியத்தையும் வழங்குமாறு இறைவனைப் பிரார்த்திக்கிறேன். மறைந்த கனிஷ்க சேனாநாயக்கவின் ஆன்மா சாந்தியடையட்டும்” என மகிந்த தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *