
பிரித்தானியா (UK) உட்பட ஐரோப்பிய நாடுகளில் வசிக்கும் மக்களுக்கு எதிர்வரும் ஒக்டோபர் 25 ஆம் திகதி தொடர்பில் முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.
ஐரோப்பிய பிராந்தியங்களில் நடைமுறையிலுள்ள ‘பகல் நேர சேமிப்பு நேரம்’ (Daylight Saving Time – DST / குளிர்கால நேர மாற்றம்) நிறைவுக்கு வருகின்றது.
இதை முன்னிட்டு, வரும் 2026 ஒக்டோபர் 25 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 3:00 மணிக்கு கடிகார நேரம் 1 மணி நேரம் பின்னோக்கி (2:00 மணிக்கு) மாற்றப்படவுள்ளது.
இதன்மூலம் பிரித்தானியா, பிரான்ஸ், ஜெர்மனி, சுவிட்சர்லாந்து, இத்தாலி உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் வாழும் மக்கள் அன்றைய தினம் மேலதிகமாக 1 மணிநேர உறக்கத்தைப் பெறுவர்.
அத்துடன், இந்த நேர மாற்றத்தின் காரணமாக இலங்கை மற்றும் இந்தியாவுடனான நேர இடைவெளி 1 மணி நேரம் அதிகரிக்கும்.
