செம்மணி தொடர்பில் மூடி மறைக்கப்படும் உண்மைகள்!!

செம்மணி தொடர்பில் மூடி மறைக்கப்படும் உண்மைகள்!!

 யாழ்ப்பாணம் – செம்மணி மனிதப் புதைகுழி விசாரணை தொடர்பில் வெளிவந்துள்ள 4ஆவது இடைக்கால அறிக்கை முற்றிலும் திசைதிருப்பப்பட்டது என்றும், உண்மைகளை மூடி மறைக்கும் சதிச் செயல் என்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தள்ளார்.


இன்று(23.10.2026) கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

செம்மணி விவகாரம் தொடர்பாக முன்னர் வெளியிடப்பட்ட அறிக்கைகளில் கூறப்பட்ட ஆய்வுகளை, 4ஆவது இடைக்கால அறிக்கை தலைகீழாக மாற்றி எழுதியுள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

இதுவரை கண்டெடுக்கப்பட்ட எச்சங்களில் பெரும்பாலானவை உடைகள் இன்றிப் புதைக்கப்பட்டுள்ளன என்று முன்னர் தெரிவிக்கப்பட்ட நிலையில், தற்போது இயற்கை அழுத்தம் காரணமாக உடைகளும் உடல்களும் கரைந்துபோயிருக்கலாம் எனப் புது விளக்கம் அளிப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும் அவர் குறிப்பிட்டார்.

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவினர் மற்றும் சர்வதேச நிபுணர்கள், செம்மணி விசாரணைக்குப் போதிய நிதியும், தடயவியல் மற்றும் உடற்கூற்றியல் தொழில்நுட்ப வசதிகளும் இல்லை என்றும், சர்வதேச உதவிகள் அவசியம் என்றும் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளனர் என்றும் தெரிவித்தார்.

செம்மணி விசாரணைகளைச் சர்வதேசப் பொறுப்புடன் முழுமையாக நடத்த அரசு தயங்குகின்றது என்றும், குற்றங்களைச் செய்துவிட்டு அதனை மூடிமறைக்க முற்படும் முந்தைய அரசுகளை விட இந்த அரசு வேறுபட்டதல்ல என குற்றம் சாட்டினார்.

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *