இலங்கை பொலிசாரின் இணைய தளம் மக்களை அச்சுறுத்துகிறதா!!

இலங்கை பொலிசாரின் இணைய தளம் மக்களை அச்சுறுத்துகிறதா!!

 இலங்கை பொலிஸாரின் உத்தியோகபூர்வ ஃபேஸ்புக்(Facebook) பக்கத்தில் வெளியிடப்பட்ட “Think twice before you open your mouth” என்ற தலைப்பிலான பதிவு பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கும் தொனியில் அமைந்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

“வாய் திறப்பதற்கு முன் இருமுறை சிந்தியுங்கள்” என்ற வாசகத்துடன், பிரசுரிக்கப்பட்டுள்ள பதிவில் அடக்குமுறை இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் ‘YOUTH FOR CHANGE’ அமைப்பின் பிரதிநிதிகள், நேற்று(22.10.2026) இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் உத்தியோகபூர்வமாக முறைப்பாடு ஒன்றையும் பதிவு செய்துள்ளனர்.

குறித்த அமைப்பின் சர்வதேச விவகாரச் செயலாளர் சக்தி மகவிதா, தேசியக் குழு உறுப்பினர் உதார சந்தருவன் மற்றும் கொழும்பு மாவட்டக் குழு உறுப்பினர் டெரன்ஸ் ரொட்ரிகோ ஆகியோர் இந்த முறைப்பாட்டைப் பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *