சீரற்ற காலநிலை காரணமாக கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிவிப்பு!!

சீரற்ற காலநிலை காரணமாக கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிவிப்பு!!

 நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக பாடசாலைகளை நடத்துவது தொடர்பில் கல்வி அமைச்சு முக்கிய அறிவிப்பொன்றினை விடுத்துள்ளது.

சீரற்ற வானிலை காரணமாக பாடசாலைகளில் வகுப்புகளை நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டால், அது தொடர்பில் தீர்மானம் எடுக்கும் அதிகாரம் மாகாண கல்வி செயலாளர்கள் மற்றும் மாகாண கல்விப்பணிப்பாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி, மோசமான வானிலை காரணமாக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் பாதுகாப்புக்கு பாதிப்பு ஏற்படக்கூடிய சூழ்நிலைகளில் தேவையான தீர்மானங்களை மேற்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளதுடன்

மத்திய மாகாணத்தின் சில பாடசாலைகளின் கற்றல் நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன எனவும் 

மத்திய மாகாணத்தின் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களின் சில கல்வி வலயங்களுக்கு உட்பட்ட 26 பாடசாலைகளின் கற்றல் நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் மத்திய மாகாண ஆளுநர் ஹர்ஷ சுரங்க பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.    

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *