
சுன்னாகம் சிவன் சிறுவர் கழக மாணவர்களின் சிறுவர் தின நிகழ்வும் முதியோர் கௌரவிப்பும் கடந்த சனிக்கிழமை ( 24.10.2026) அன்று சுன்னாகம் – கதிரமலை சிவன் தேவஸ்தான மண்டபத்தில் இடம்பெற்றது.

குறித்த நிகழ்வின் போது
கழகச் சிறார்களின் சிந்தனையில் உருவான கலங்கரை சஞ்சிகையும் வெளியீடு செய்யப்பட்டது.

முன்னதாக, மாணவர்களின் இன்னிய இசையுடன் ஆரம்பமான நிகழ்வானது, கதிரமலை சிவன் கோயில் ஆலய வளாகத்தில் இருந்து ஆரம்பமாகி, மண்டபத்தை வந்தடைந்தது, அகவணக்கம், மங்கல விளக்கேற்றல் ஆகிய நிகழ்வுகளுடன் ஆரம்பமான இந்நிகழ்வானது, தொடர்ந்து மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள், விருந்தினர் உரைகள், பரிசில் வழங்கல்கள், மூத்தோருக்கான கௌரவிப்பு என்பவற்றுடன் இனிதே நிறைவடைந்தது,

குறித்த நிகழ்வில் மாணவர்களே அதிகமாக நிகழ்வுகளை ஒழுங்கமைத்து, கௌரவிப்புகளை வழங்கியமை பாராட்டுக்குரிய விடயமாகும்.

சிவன் சிறுவர் கழக நிறுவுனரான கவிதாமலர் சுதேஸ்வரனுக்கான பாராட்டும் வாழ்த்துப்பா வழங்கும் நிகழ்வும் மாணவர்களால் முன்னெடுக்கப்பட்டது.

இது போன்ற சிறுவர்கழகங்கள் கிராமம் தோறும் உருவாக்கப்பட்டு, மாணவர்கள் நெறிப்படுத்தப்பட்டால் நிச்சயமாக எதிர்கால தலைமுறை சிறந்த பாதையில் செல்லும் என்பது நிதர்சனம்.
