
கிளிநொச்சி முரசுமோட்டை முருகானந்தா கல்லூரி உயர்தர மாணவி யோகேஸ்வரன் தரணிகா அவர்களின் முன்மாதிரியான செயற்பாடு
சமூகத்தையும் சூழலையும் பாதுகாக்கும் நோக்குடன் தனது கிராமத்தில் சமூகத்தை ஒன்றிணைத்து இன்று முரசுமோட்டை கிராமத்தில் 150மரக்கன்றுகள் நாட்டப்பட்டது.சுற்றாடல் முன்னோடிக்கழக மாணவியான இவர் சுற்றாடல் முன்னோடி பதக்கத்தை பெறும் நோக்குடனும் தமது கிராமத்தின் சூழலையும் அழகு படுத்தும் நோக்குடன் குறித்த மரக்கன்றுகளை நாட்டினார்.