அரசியலுக்கு வருவாரா மகிந்த குடும்ப பெண் அங்கத்தவர்!!

அரசியலுக்கு வருவாரா மகிந்த குடும்ப பெண் அங்கத்தவர்!!

 எயார்பஸ் ஒப்பந்த மோசடி தொடர்பில் நாமல் ராஜபக்ச மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டும், அவரது மனைவி லிமினி ராஜபக்சவுக்கு எதிரான பிரச்சாரமும் ராஜபக்ச குடும்பத்தினரை பெரும் கவலையில் ஆழ்த்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த பின்னணியில் நாமல் ராஜபக்சவின் மனைவி லிமினி ராஜபக்ச அரசியலில் களமிறங்குவது குறித்த தகவல்கள் தற்போது இலங்கை அரசியலில் பேசப்பட்டு வருகின்றது

இந்தக் கூற்று தொடர்பாக நாமல் ராஜபக்சவோ அல்லது அவரின் தரப்பினரோ எந்தவொரு அதிகாரப்பூர்வ தகவலும் வெளியிடப்படவில்லை.

இந்த நிலையில், ஷிரந்தி ராஜபக்ச முக்கியமான அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளமையினாலும், நாமல் ராஜபக்ச சிறையில் உள்ளமையினாலும் மகிந்த ராஜபக்ச கடுமையான மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

நாமல் ராஜபக்ச மீதான அதே குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடைய ஷமிந்திர ராஜபக்ச மற்றும் பிரியங்கா நியோமாலி ஆகியோர் நீதிமன்ற நடவடிக்கைகளை தவிர்த்து நாட்டை விட்டு தப்பியோடிய நிலையில், இது நாமலுக்கு பெரும் சவாலாக மாறியுள்ளதாக கூறப்படுகின்றது.

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *