பொலித்தீன் பைகள் மூலம் கோடிக்கணக்கில் இலாபம் ஈட்டும் நிறுவனங்கள்

பொலித்தீன் பைகள் மூலம் கோடிக்கணக்கில் இலாபம் ஈட்டும் நிறுவனங்கள்

பொருட் கொள்வனவின்போது விநியோகிக்கப்படும் பொலித்தீன் பைகளுக்கு நுகர்வோரிடமிருந்து அறவிடப்படும் பணத்தால், நிறுவனங்கள் அதிக இலாபத்தை ஈட்டுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.சுற்றுச் சூழல் நீதிக்கான மத்திய நிலையத்தின் தலைவர் ஹேமந்த விதானகே இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.முன்னதாக பொருட் கொள்வனவின்போது பொலித்தீன் பைகளை இலவசமாக வழங்கிய நிறுவனங்கள், தற்போது அதற்காக நுகர்வோரிடமிருந்து பணத்தை அறவிடுகின்றன.இதன்மூலம், ஒரு நாளைக்கு சுமார் 50 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான தொகையை நிறுவனங்கள் இலாபமாக ஈட்டுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.பொலித்தீன் பைகளுக்கு அறவிடப்படும் பணம் அரசாங்க வரியாக சேகரிக்கப்பட்டு, கழிவு முகாமைத்துவம் மற்றும் சூழல் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு திட்டங்களுக்குப் பயன்படுத்தப்பட வேண்டும்.எனினும், கடந்த அரசாங்கமும் தற்போதைய அரசாங்கமும் இந்த வரியை முறையாக அமுல்படுத்தவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.இந்தநிலையில், நிறுவனங்கள் ஈட்டும் இந்த மேலதிக இலாபத்தை அரசாங்கம் முறையாக வரி மூலம் வசூலித்து, அதனைச் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்கு பயன்படுத்த வேண்டும் என சுற்றுச் சூழல் நீதிக்கான மத்திய நிலையத்தின் தலைவர் வலியுறுத்தியுள்ளார்.

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *