2025 ஆம் ஆண்டில் யூடியூப் ஈட்டிய வருவாய் குறித்து வெளியாகிய புதிய தகவல்

2025 ஆம் ஆண்டில் யூடியூப் ஈட்டிய வருவாய் குறித்து வெளியாகிய புதிய தகவல்

கூகுள் நிறுவனம் தனது காணொளி தளமான யூடியூப் (YouTube), 2025 ஆம் ஆண்டில் 60 பில்லியன் டொலருக்கும் அதிகமான வருவாயைப் ஈட்டியுள்ளதாகத் தெரிவித்துள்ளது. விளம்பரங்கள் மற்றும் கட்டணச் சந்தாக்கள் (Subscriptions) மூலம் யூடியூப் ஈட்டிய 60 பில்லியன் டொலர் வருவாயானது, அதன் போட்டியாளரான நெட்ஃபிளிக்ஸ் (Netflix) ஈட்டிய 45 பில்லியன் டொலர் வருவாயை விட மிக அதிகமாகும்.2006 ஆம் ஆண்டு யூடியூப்பை கூகுள் கையகப்படுத்திய பிறகு, அதன் வருடாந்த வருவாயைத் தனித்து வெளிப்படுத்தியிருப்பது இதுவே முதல் முறையாகக் கருதப்படுகிறது.யூடியூப் தற்போது வெறும் காணொளி தளமாக மட்டும் இல்லாமல், டிஜிட்டல் உலகின் ஒரு அடிப்படை உள்கட்டமைப்பாகவே மாறியுள்ளது.ஆய்வுத் தரவுகளின்படி, சர்வதேச அளவில் 70 சதவீத நுகர்வோர் வாராந்திரமும், 50 சதவீதத்திற்கும் அதிகமானோர் தினசரி அடிப்படையிலும் யூடியூப்பைப் பயன்படுத்துகின்றனர்.கூகுள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை கூறுகையில், “யூடியூப் பிரீமியம்” சேவையானது கூகுளின் மொத்த கட்டணச் சந்தாதாரர்களின் எண்ணிக்கையை 2025 இல் 325 மில்லியனுக்கும் மேலாக உயர்த்த உதவியுள்ளதாகத் தெரிவித்தார்.விளம்பரங்கள் இன்றி காணொளிகளை பார்ப்பதற்கும், பின்னணியில் இசையைக் கேட்பதற்கும் மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *