அரச பேருந்தில் இளைஞனுக்கு ஏற்பட்ட துயரம்!!

அரச பேருந்தில் இளைஞனுக்கு ஏற்பட்ட துயரம்!!

கொழும்பில் இருந்து கேகாலையிலுள்ள தனது வீட்டிற்கு சென்ற இளைஞன் மர்ம நபர் கொடுத்த பிஸ்கட்டினால் கையடக்க தொலைபேசியை இழந்துள்ளார்.

இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பேருந்தில் பயணித்துக் கொண்டிருந்த போது, இனந்தெரியாத நபர் ஒருவர் கொடுத்த பிஸ்கட்டை சாப்பிட்டு மயக்கமடைந்த நிலையில், 5 லட்சம் ரூபா பெறுமதியான ஸ்மார்ட் ரக கையடக்க தொலைபேசி காணாமல் போயுள்ளது.

இந்த நிலையில் சுயநினைவின்றி இருந்த இளைஞன் நேற்று முன்தினம் இரவு கேகாலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகக் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர் கேகாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியை சேர்ந்த 18 வயதுடைய இளைஞர் என தெரியவந்துள்ளது.

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *