இலங்கையில் திறக்கப்படவுள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்கள்!!

இலங்கையில் திறக்கப்படவுள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்கள்!!

 இலங்கையில் புதிய எரிபொருள் நிரப்பு நிலையங்கள் அமைப்பது தொடர்பில் எரிசக்தி அமைச்சர் அநுர கருணாதிலக்க அறிவிப்பொன்றை விடுத்துள்ளார்.

கொழும்பில் வைத்து நேற்றைய தினம் (10.10.2026) ஊடகங்களிடம் இது தொடர்பில் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், எதிர்காலத்தில் புதிய எரிபொருள் நிரப்பு நிலையங்களை அமைப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது.

இதன்போது சந்தையில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படுவதற்கு ஒருபோதும் இடமளிக்கப்பட மாட்டாது.

மேலும், இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் தனது நாளாந்த எரிபொருள் விநியோகத்தை சுமார் 80 சதவீதமாக அதிகரித்துள்ளது என சுட்டிக்காட்டியுள்ளார். 

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *