இலங்கை பொலிசார் பொது மக்களுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை!!

இலங்கை பொலிசார் பொது மக்களுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை!!

இலங்கை பொலிஸாரின் பெயர் மற்றும் அடையாளங்களைப் பயன்படுத்தி   செயற்கை நுண்ணறிவு (AI) தொழில் நுட்பத்தின் மூலம் உருவாக்கப்பட்ட போலி விளம்பரங்கள் பேஸ்புக் சமூக வலைத்தளத்தில் பரப்பப்பட்டு  இடம்பெறும் மோசடி தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான விளம்பரங்கள் மற்றும் தகவல்கள் உத்தியோகபூர்வமானவை அல்ல என்றும், போலி விளம்பரங்களை நம்பி ஏமாற வேண்டாம் என்றும் பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

இலங்கை பொலிஸின் பெயர், இலச்சினை மற்றும் அடையாளங்களைப் பயன்படுத்தி AI தொழில்நுட்பத்தின் மூலம் உருவாக்கப்படும் விளம்பரங்கள் அல்லது அறிவித்தல்கள் உண்மையானவை அல்ல என பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர். 

எனவே, இலங்கை பொலிஸின் உத்தியோகபூர்வ இலச்சினையுடன் கூடிய உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கத்தில் வெளியிடப்படும் தகவல்கள் மற்றும் அறிவித்தல்களை மட்டுமே பொதுமக்கள் நம்புமாறு பொலிஸ் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *