ஈரான் விதித்த எல்லைக் கட்டுப்பாடுகள்!!

ஈரான் விதித்த எல்லைக் கட்டுப்பாடுகள்!!

 ஈரானின் புரட்சிகரக் காவல் படை (IRGC) அறிவித்துள்ள புதிய கடல் எல்லைக் கட்டுப்பாடுகள் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதன்படி, வழக்கமான ஹோர்முஸ் நீரிணைப் பகுதியைத் தாண்டி, ஈரானின் தென்கிழக்குத் துறைமுக நகரமான சாபஹார் (Chabahar) பகுதியிலிருந்து தொடங்கி ஓமன் வளைகுடா மற்றும் அரபிக் கடலின் பரந்த பகுதிகள் வரை இந்த “தடைசெய்யப்பட்ட மண்டலம் நீடிக்கப்படும்.

இதற்கான துல்லியமான புவியியல் எல்லை வரம்புகள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என IRGC பேச்சாளர் உசேன் மொஹெபி (Hossein Mohebi) தெரிவித்துள்ளார்.

இந்த தடை நீடிப்பின் பின்னர், ஈரானின் முறையான அனுமதி அல்லது முன் ஒருங்கிணைப்பு இல்லாமல் எந்தவொரு வணிக அல்லது சரக்குக் கப்பல்களும் இந்த எல்லைக்குள் நுழைய முடியாது.

முன் அனுமதியின்றி நுழையும் கப்பல்கள் மீது ஈரானிய சட்டங்களின்படி பொருளாதார மற்றும் செயல்பாட்டுத் தடைகள் விதிக்கப்படும். அத்தகைய கப்பல்களுக்கான கடல்சார் சேவைகள், கப்பல் காப்பீடு (Insurance) மற்றும் தளவாட ஆதரவுகள் (Logistics services) அனைத்தும் ரத்து செய்யப்படும்.

எதிர்காலத்தில் அவை ஹோர்முஸ் நீரிணையைக் கடக்கவும் நிரந்தரத் தடை விதிக்கப்படும். இந்த நிலையில்,அமெரிக்க மற்றும் அதன் நட்பு நாடுகளின் போர்க்கப்பல்கள் மற்றும் எண்ணெய் கப்பல்களின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தவும், பிராந்தியக் கடற்பகுதியில் ஈரானின் கட்டுப்பாட்டை அதிகரிக்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *