உயர்தர மாணவர்களுக்கு பருத்தித்துறையில் இலவச செயலமர்வு!!

உயர்தர மாணவர்களுக்கு பருத்தித்துறையில் இலவச செயலமர்வு!!

 பருத்தித்துறையில் உயர்தர மாணவர்களுக்கான இலவச முன்னோடி செயலமர்வு  இடம்பெற்றுள்ளது.

உயர்தர பரீட்சைக்கு தோற்ற பருத்தித்துறையில் மாணவர்களுக்கான இலவச முன்னோடி செயலமர்வு பருத்தித்துறையில் வேலும்மயிலும் அறக்கட்டையின் ஏற்பாட்டி இடம்பெற்றுள்ளது.

பருத்தித்துறை ஓடக்கரை வீதியில் உள்ள வேலும்மயிலும் அறக்கட்டளை அரங்கில் நேற்று (29) வெள்ளிக்கிழமை காலை 9.00 மணிக்கு ஆரம்பமாகிய இலவச முன்னோடி செயலமர்வு நண்பகல் 1.00 மணி வரை இடம்பெற்றது.

வேலும்மயலும் அறக்கட்டளையில் கற்பித்தல் செயற்பாட்டில் ஈடுபட்டுவரும் பொருளியல் ஆசிரியர் விஷ்வா பொருளியல் பாடம் தொடர்பில் பரீட்சைக்கான தயார்ப்படுத்தல் கருத்துரைகளை வழங்கியிருந்தார்.  கால முகாமைத்துவப் பயிற்சி மற்றும் மன அழுத்தத்தை நிர்வகித்தல், கடந்த கால வினாக்களை அணுகுவதற்கும், சிறந்த முறையில் விடை எழுதுவதற்குமான ஆலோசனைகளும் வழங்கப்பட்டது.

இம்முன்னோடி செயலமர்வில் வடமராட்சி, வலிகாமம் மற்றும் யாழ்ப்பாணம் கல்வி வலயங்களுக்கு உட்பட்ட 14 பாடசாலைகளை சேர்ந்த 60 மாணவர்கள் பங்கேற்றிருந்தனர்.

வேலும்மயிலும் அறக்கட்டளையானது கல்வி மேம்பாட்டு மற்றும் சமூக வலுப்படுத்தல் செயற்பாடுகளை கடந்த 10 ஆண்டுகளாக முன்னெடுத்து வருகிறது. இலவச கல்வி வகுப்புகள், தொழிற்பயிற்சிகள், வாழ்வாதார உதவிகள் உள்ளிட்ட செயற்பாடுகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்தாண்டு உயர்தர பரீட்சைக்கு தோற்ற உள்ள மாணவர்களுக்கான இலவச முன்னோடி செயலமர்வு ஆரம்பிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து வரும் வாரங்களில் வணிகவியல் பாடங்களுக்கான 16 முன்னோடி செயலமர்வுகள் இடம்பெற திட்டமிடப்பட்டுள்ளது. இதில் பங்கேற்க ஆர்வமுள்ள மாணவர்கள் முன்பதிவுகளை செய்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *