எங்கள் கிணறுகளை ஆவணப்படுத்துவோம் – வடமாகாண நீர்வள தரவைக் கட்டமைப்பதில் நீங்களும் பங்காளராகுங்கள்!! 

எங்கள் கிணறுகளை ஆவணப்படுத்துவோம் – வடமாகாண நீர்வள தரவைக் கட்டமைப்பதில் நீங்களும் பங்காளராகுங்கள்!! 

நல்லூர் முருகன் திருவிழாவை முன்னிட்டு நிலத்தடி நீர் எங்கள் உயிர்நாடி எனும் தொனிப்பொருளில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பல ஆய்வுத் துறைகளின் கூட்டு முயற்சியாக வடமாகாண நீர்வளம் பேணுதற்கான பேராய்வுச் செயற்றிட்டமும் (WASPAR) வடக்கின் இளம் நீர்வாண்மையாளர் வட்டமும் (YWP) இணைந்து வழங்கும் நிலத்தடி நீர் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வுக் கண்காட்சி மூன்றாவது முறையாக நல்லூர் பாரதியார் சிலைக்கு அருகில் அமைந்துள்ள நெசவுக் கைத்தொழிற் பயிற்சி நிறுவன வளாகத்தில் நேற்றைய தினம் ஆரம்பமாகி இடம்பெற்று வருகின்றது. 

11.09.2026 வெள்ளிக்கிழமை வரை காலை 9 மணி தொடக்கம் இரவு 9 மணி வரை இடம்பெறவுள்ள மேற்படி நீர்க் கண்காட்சியின் முக்கிய அம்சங்களில் ஒன்றாக உங்கள் பகுதிகளில் உள்ள வீட்டுக் கிணறுகள், பொதுக் கிணறுகள், விவசாயக் கிணறுகள், குழாய்க் கிணறுகள் ஆகியவற்றை உங்கள் கைபேசியூடாக பதிவு செய்து வடமாகாணத்தின் நிலத்தடி நீர்வளத் தகவலை ஒழுங்குபடுத்தி தரவுகளை கட்டமைக்கும் WASPAR  செயற்திட்டத்தின் பங்காளராகி நீங்கள் ஒவ்வொருவரும் உதவ முடியும். 

அதனை கீழ்க் கண்ட சுலபமான வழிமுறையில் பதிவு செய்யலாம். முதலில் மேற்படி சுவரொட்டியின் வலது பக்க மேல் மூலையில் உள்ள QR குறியீடை உங்கள் கைபேசியை பயன்படுத்தி மின்வருடல் (scan) செய்யுங்கள். 

பின்னர் நீர்மூலத்திற்கு அருகில் இருந்து GPS இருப்பிடத்தை பதிவு செய்யுங்கள். அதன்பின்பு கிணறு அல்லது நீர்மூலம் தெளிவாகத் தெரியும் புகைப்படத்தை பதிவேற்றுங்கள். தொடர்ந்து பதிவை சேமியுங்கள். 

நீர்மூலம் தொடர்பிலான மேலதிக விபரங்களை உடனடியாகவோ பின்னரோ பூர்த்தி செய்யலாம். உங்கள் பங்கேற்பாளர் இலக்கத்தையும், 6 எண் குறியீட்டையும் பாதுகாப்பாக வைத்திருங்கள். 

GPS இருப்பிடமும் நீர்மூலப் புகைப்படமும் சேமிக்கப்பட்ட பதிவுகள் தினசரிக் குலுக்கலுக்கு தகுதி பெறும்.   

முழுமையாக பூர்த்தி செய்யப்பட்ட பதிவுகள் மட்டுமே 11-09-2026 அன்று இடம்பெறவுள்ள இறுதிக் குலுக்கலுக்கு தகுதி பெறும். குலுக்கலில் வெற்றிபெறுபவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும். 

வரும் 10 ஆம் திகதி வரை ஒருவர் எத்தனை நீர்மூலங்களையும் அதன் GPS இருப்பிடத்தை சரியாக பதிவு செய்து, புகைப்படத்தை இணைத்து, தொடர்ந்து கேட்கப்படும் கேள்விகளுக்கு பதிலளித்து ஆவணப்படுத்த முடியும்.

QR குறியீடை மின்வருட (Scan) முடியாதவர்கள் கீழேயுள்ள இணைப்பை பயன்படுத்தியும் குறித்த இணைப்பை திறந்து பதிவு செய்ய முடியும்.

https://www.tinyurl.com/wellsnorth

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *