மசாஜ் செய்ய சென்ற பிரஞ்சு பெண்ணுக்கு ஏற்பட்ட சங்கடம்!!

மசாஜ் செய்ய சென்ற பிரஞ்சு பெண்ணுக்கு ஏற்பட்ட சங்கடம்!!

களுத்துறையில் ஆயுர்வேத மசாஜ் செய்ய சென்ற பெண்ணிடம் தகாத முறையில் செயற்பட்ட சிகிச்சையாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.


களுத்துறை வடக்கு பொலிஸாரால் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வஸ்கடுவ பகுதியில் உள்ள ஆயுர்வேத மசாஜ் மையத்தில் பணியாற்றும் 25 வயதுடைய இளைஞரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பிரெஞ்சு பெண் ஒருவர் ஏனைய சிலருடன் இலங்கைக்கு சுற்றுலா வந்துள்ளார்.

அவர் வஸ்கடுவ பகுதியிலுள்ள சுற்றுலா விடுதியில் தங்கியிருந்த வேளையில், மசாஜ் சிகிச்சை பெற்றுக்கொள்வதற்காக வந்துள்ளார்.

மசாஜ் செய்து முடித்ததும் உறங்கி விட்டதாகவும், இதன்போது சந்தேக நபர் அங்க சேட்டையில் ஈடுபட்டதாக முறைப்பாடு செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேக நபரை களுத்துறை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பிரதான பொலிஸ் பரிசோதகர் துஷார சில்வாவின் தலைமையில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *