கனடாவில் உயிரிழந்த யாழ். இளைஞன் – இறப்பின் பின்னான நெகிழ்ச்சி செயல்!!

கனடாவில் உயிரிழந்த யாழ். இளைஞன் – இறப்பின் பின்னான நெகிழ்ச்சி செயல்!!

மரணத்திற்கு முன் தனது உடல் உறுப்புக்களை தாணம் செய்து விட்டு உயிரிழந்த யாழ் இளைஞன் 6 பேருக்கு உயிர் தானம்

கனடாவின் பிரம்ப்டன் நகரில் மயங்கி விழுந்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தமிழ் இளைஞர் ஒருவர், தாமதமான மருத்துவ சிகிச்சையால் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

யாழ்ப்பாணம் பலாலியைச் சேர்ந்ததும், யாழ். புனித பத்திரிசியார் கல்லூரியின் பழைய மாணவருமான 30 வயதுடைய றெஜிபோல்ட் றொபேர்ட் கெனடி என்பவரே உயிரிழந்தவர்.

கடந்த ஏப்ரல் 13ஆம் தேதி மாலை, Queen Street மற்றும் Kennedy Road சந்திப்பிலுள்ள பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தபோது அவர் திடீரென மயங்கி விழுந்ததாக தெரிவிக்கப்படுகிறது. சம்பவ இடத்துக்கு வந்த Peel பிராந்திய பொலிஸார், மயக்க நிலையில் இருந்த அவரை விசாரித்ததுடன், அவர் மதுபோதையில் உள்ளார் என தவறாக கருதியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதன் அடிப்படையில், அவருக்கு அபராதச் சீட்டு வழங்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. பின்னர் அவர் அம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டபோதும், தவறான தகவல் காரணமாக அவசர சிகிச்சை வழங்குவதில் தாமதம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

மருத்துவ பரிசோதனையில், அவரது உடலில் மதுவின் தாக்கம் எதுவும் இல்லையென உறுதி செய்யப்பட்டது. மாறாக, மூளையில் ஏற்பட்ட இரத்தக்கசிவே (Brain Hemorrhage) மயக்கம் ஏற்படுத்தியதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். எனினும், தாமதமான சிகிச்சையால் அவர் உயிரிழந்தார்.

மரணத்திற்கு முன் உடல் உறுப்புத் தானத்திற்கு ஒப்புதல் அளித்திருந்த கெனடி, தனது மறைவின் மூலம் 6 பேருக்கு புதிய வாழ்வு அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், முதற்கட்ட தகவல் தவறானது என்பதை மருத்துவ அறிக்கை உறுதிப்படுத்தியதைத் தொடர்ந்து, வழங்கப்பட்ட அபராதம் தவறானது என Peel பிராந்திய பொலிஸார் ஒப்புக்கொண்டுள்ளனர். சம்பவம் தொடர்பாக உள்ளக விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளன.

மூன்று வாரங்களுக்கு முன்பு கனடிய குடியுரிமை பெற்றிருந்த இவர், தனது தாயாரையும் உறவினர்களையும் யாழ்ப்பாணத்தில் சந்திக்கத் திட்டமிட்டிருந்தார். தற்போது அவரது உடலை இலங்கைக்கு அனுப்புவதிலும், தாயாரை கனடாவிற்கு அழைத்து வருவதிலும் ஆவண சிக்கல்கள் நிலவுவதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்தச் சம்பவம் குறித்து வெளிப்படையான மற்றும் முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என கனடியத் தமிழ் சமூகத்தினர் வலியுறுத்தி வருகின்றனர்.

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *