கொழும்பு பல்கலைக் கழகத்திற்கு எதிராக மாணவர் முறைப்பாடு!!

கொழும்பு பல்கலைக் கழகத்திற்கு எதிராக மாணவர் முறைப்பாடு!!

 தனிப்பட்ட பழிவாங்கும் நடவடிக்கையின் காரணமாக தனக்கு தேர்வு மதிப்பெண்களை சரியாக வழங்கவில்லை என கொழும்புப் பல்கலைக்கழகத்திற்கு எதிராக முன்னாள் மாணவர் ஒருவர் வழக்குத் தாக்கல் செய்துள்ளார்.

கொழும்புப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர் ஒருவர், நிர்வாகம் மற்றும் விரிவுரையாளர்கள் குழுவினரின் தேர்வு முறைகேடுகள், தன்னிச்சையான நடவடிக்கைகள் மற்றும் பழிவாங்கும் நடவடிக்கைகளால் தனது நேரமும், உழைப்பும், பணமும் வீணடிக்கப்பட்டதாகக் கூறி, நுவகொட மாவட்ட நீதிமன்றத்தில் இழப்பீடு கோரி வழக்குத் தாக்கல் செய்துள்ளார்.

இந்த முறைப்பாட்டை, சனத் குமார அதுகொரல என்ற மாணவர், சட்டத்தரணி தனோஷா பெரேரா மூலம் தாக்கல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *