சங்கீர்த்தனுக்கு பிணை – நீக்கப்பட்ட சட்டங்கள்!!

சங்கீர்த்தனுக்கு பிணை – நீக்கப்பட்ட சட்டங்கள்!!

 சொல்லிசை கலைஞர் சங்கீத்சன் தொடர்பான வழக்கில் சற்றுமுன் முக்கிய தீர்ப்பு வெளியாகியுள்ளது. கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த அவர் இன்று சாவகச்சேரி நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார். வழக்கை பரிசீலித்த நீதிமன்றம் சங்கீத்சனுக்கு பிணை வழங்க உத்தரவிட்டுள்ளது.

சொல்லிசை பாடகர் சங்கீத்சனுக்கு எதிராகப் பாய்ந்திருந்த பயங்கரவாத தடைச் சட்டப் பிரிவுகளை நீக்கி தண்டனைச் சட்டக் கோவை பிரிவுகளில் வழக்கு தாக்கல் செய்யுமாறு பொலிசாருக்கு பணிபுரை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சொல்லிசை பாடகர் சங்கீத்சனுக்கு எதிராகப் பாய்ந்திருந்த பயங்கரவாதத் தடைச் சட்டத்தை (PTA) முழுமையாக நீக்கி, சட்டமா அதிபர் பிறப்பித்துள்ள அதிரடி உத்தரவு இன்றைய தினம் நீதிமன்றில் வழங்கப்பட்டு உள்ளது.

சமூக வலைத்தளங்களிலும், அரசியல் தளங்களிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த இந்த வழக்குத் தொடர்பில், அடுத்தகட்ட நடவடிக்கை குறித்துப் பொலிஸார் சட்டமா அதிபரின் ஆலோசனையைக் கோரியிருந்தனர்.

வழக்கின் நுணுக்கங்களையும், பின்னணிகளையும் மிக ஆழமாக ஆராய்ந்த சட்டமா அதிபர், எவ்வித அரசியல் அழுத்தங்களுக்கும் இடமளிக்காது, மிகவும் துணிச்சலான மற்றும் கௌரவமிக்க தீர்மானம் ஒன்றை எடுத்துள்ளார்.

இளைஞன் சங்கீத்சனுக்கு எதிராகக் சுமத்தப்பட்டிருந்த கொடூரமான பயங்கரவாதத் தடைச் சட்டக் குற்றச்சாட்டுகளை சட்டமா அதிபர் முழுமையாக நீக்கியுள்ளார்.

அதோடு இந்த வழக்கினை தண்டனைச் சட்டக் கோவையின் 120ஆம் பிரிவின்கீழ் (சாதாரண சட்டப் பிரிவு) மாற்றிப் பதிவு செய்யுமாறு பொலிஸாருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *